Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்

சென்னை மாநகராட்சியில் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக, லஞ்சம், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெறுதல் மற்றும் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய புகார்களுக்காக எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

.அதன்படி, 4 மூத்த அதிகாரிகள் உட்பட மொத்தம் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளும், நான்கு பேர் மீது கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்படவுள்ளன.

டெண்டர் முறைகேடு, நிதி முறைகேடு மற்றும் லஞ்ச புகார்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* 2025-2026ம் ஆண்டில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்குப் போலியான ரசீதுகளைச் சமர்ப்பித்த மணலி மற்றும் மாதவரம் மண்டல சுகாதார அதிகாரி டாக்டர் தேவிகலா, உள்விசாரணைக்குப் பிறகு ஜூலை 9ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

* ஷெனாய் நகரில் உள்ள மண்டல துணை ஆணையர் அலுவலகத்தில் நிபுணராகப் பணியாற்றும் சிவ பொற்கொடி மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு இளைஞரிடமிருந்து ரூ. 6 லட்சம் பெற்றதற்காக ஜூலை 11ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

* கட்டட உரிமையாளர் ஒருவரிடம் ரூ. 2.5 லட்சம் லஞ்சம் கேட்டதற்காக மாதவரம் மண்டல உதவிச் செயல் பொறியாளர் ஆனந்தராவ் ஜூலை 10ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

* கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மாநகராட்சி சாலைப் பணியாளர் பாஸ்கர், முறையான அனுமதி பெற்றிருந்த கட்டட உரிமையாளர் ஒருவரை, கட்டடத்திற்கு பூட்டி சீல் வைப்பதாக மிரட்டி ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்றதற்காக ஜூலை 10ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

* ராயபுரம் மண்டலத்தில் இயந்திரவியல் துறை ஒப்பந்ததாரர் ஒருவரிடமிருந்து பில் கணக்கு முடித்து பணம் பெற்று தருவதற்கு லஞ்சம் கேட்டதற்காக, NULM பணியாளரான கண்ணன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

error: Content is protected !!