பொ.செ., பதவியில் இருந்து விலகுங்கள் என EPS-யிடம் நேரடியாகவே அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று EPS ஆலோசனை நடத்தினார். அப்போது, தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று பொ.செ., பதவியில் இருந்து விலகுங்கள் என அவரிடம் பகுதி செயலர் கந்தன் தெரிவித்துள்ளார். இதற்கு, 47 இடங்களில் அதிமுகவை வெற்றிபெறச் செய்துள்ளேன். நான் ஏன் பதவி விலக வேண்டும் என EPS பேசியதாக கூறப்படுகிறது.
