Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டுக்கோட்டை- ஏ/சி பாரில் வழங்கப்பட்ட காலாவதியான பீர்.. குற்றச்சாட்டு

ஏ/சி பாரில் வழங்கப்பட்ட காலாவதியான பீர்.. குற்றச்சாட்டு

பட்டுகோட்டையில் உள்ள ஒரு நட்சத்திர உணவகத்தில் செயல்பட்டு வரும் ஏ/சி பாரில்
காலாவதியான பீர் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது – காவல் நிலையத்திலும், உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் கொடுக்க உள்ளதாக தகவல்

பட்டுக்கோட்டையில் சின்னையா தெருவில் உள்ள ஒரு நட்சத்திர உணவகத்தில் செயல்பட்டுவரும் ஏ/சி பாரில் மூன்று பீர் வாங்கினால்
சிக்கன் 65 மற்றும் சிக்கன் இலவசம் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த பொதுமக்களில் ஒருவர் அந்த நட்சத்திர உணவகத்திற்கு பீர் சாப்பிட சென்றபோது காலாவதியான பீர் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பு கொடுத்த பீரும் புளித்துப் போய் இருந்ததாக கூறப்படுகிறது. காலாவதியான பீரில் தேதி மட்டும் கிழிக்கப்பட்டிருந்ததை காரணம் கூறி நட்சத்திர உணவகத்தில் விளக்கம் கேட்டபோது அதுபற்றி எங்களுக்கு தெரியாது. மேலாளர் அல்லது உரிமையாளரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று விற்பனையாளர் கூறியதால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திலும், உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப் போவதாக கூறி சென்றுள்ளனர்.

error: Content is protected !!