திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு ஜலால் பக்கிரி தெரு பகுதியில், புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வார்டு கவுன்சிலர் மும்தாஜ் பேகம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி இளநிலை பொறியாளர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
