திருச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ள நிலையில், 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கணக்கெடுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல் நலன் கருதி 55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களை கணக்கெடுப்பு பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன், திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
