Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் AISF சார்பில் போராட்டம்..வாக்குவாதம் -பரபரப்பு

திருச்சியில் AISF சார்பில் போராட்டம்..வாக்குவாதம் -பரபரப்பு

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும், டெல்லியில் காக்ரோச் ஜனதா பார்ட்டியினர் அமைதி வழியில் போராடினர்.

இதேபோல் திருச்சி மற்றும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் முறைகேடுகளை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையைக் கண்டித்தும், அதற்குத் துணை நின்ற ஒன்றிய அரசைக் கண்டித்தும் ஆகில இந்திய மாணவர் பெருமன்றம் மாவட்ட

செயலாளர் ஜெய்லானி தலைமையில் திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் நடத்த கூடினர்.

ஆனால் கல்லூரி நிர்வாகம் கல்லூரி முதல்வரின் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தை நடத்தக்கூடாது என்று
எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் போராட்டக்காரர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரி வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சிறிது நேரம் கல்லூரிக்கு முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் பதவி விலக வேண்டும், மேலும் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினரை கண்டித்து கோஷமிட்டனர்.

error: Content is protected !!