Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இளம்பெண் தற்கொலை…3 குழந்தைகள் தவிப்பு… திருச்சி க்ரைம்

இளம்பெண் தற்கொலை...3 குழந்தைகள் தவிப்பு... திருச்சி க்ரைம்

கணவர் குடிபழக்கம்.. உயிரை மாய்த்த இளம் பெண்- 3 குழந்தைகள் தவிப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை கீழ பொய்கைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மனைவி கலையரசி (வயது 30) இந்த தம்பதியருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். விக்னேஸ்வரன் மதுவுக்கு அடிமையானவர். கணவரின் மது பழக்கத்தால் கலையரசி மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார். குடும்பம் நடத்த முடியாமல் தடுமாறி உள்ளார். எப்படியாவது கணவரை திருத்தி விட வேண்டும் என போராடினார். பலமுறை அவரைக் கண்டித்து பார்த்தார். இருப்பினும் விக்னேஸ்வரன் தன்னை திருத்திக் கொள்ளவில்லை என கூறப்பட்டது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நம்பிக்கை இழந்த கலையரசி யாரும் எதிர்பாராத வகையில் வீட்டின் பேன் கொக்கியில் தூக்கு போட்டு தொங்கினார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மூன்று குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது பற்றி கலையரசியின் சகோதரர் சங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தனியார் மருத்துவமனை அதிகாரி திடீர் தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை வேங்கை குறிச்சி மரைச்சி ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (29) இவர் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழ்செல்வன் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டின் பேன் கொக்கியில் மனைவி சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை பாண்டியராஜன் மணப்பாறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் முன்பு நிறுத்திய கார் திருட்டுசேலம் வாலிபர் கைது

துறையூர் உப்பிலியபுரம் குறும்பர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது முகைதீன்.இவர் தனது காரை வழக்கம்போல் இரவு வீட்டின் முன்பு சாலையோரம் நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார்.
பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது காரை காணவில்லை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர் இது பற்றி முகமது முகைதீன் உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அந்தக் காரை திருடி சென்ற சேலம் மாவட்டம் தலைவாசல் பழைய தீப்பெட்டி கம்பெனி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (24) என்பவரை கைது செய்தனர். பின்னர் மறைத்து வைத்திருந்த காரை மீட்டனர்.

error: Content is protected !!