நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டெல்லி பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே டெல்லியில் மறு அறிவிப்பு வரும் வரை 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. டெல்லியில் முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
