Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடி-வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்!

தூத்துக்குடி-வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை பேரூராட்சிப் பகுதியில் வெறிநாய் ஒன்று தெருவில் சென்ற பொதுமக்களைத் திடீரெனத் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில், பகுதியில் சுற்றித் திரியும் வெறிநாய்களைப் பிடிக்கப் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் தீவிரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்திருப்பேரை பேரூராட்சிக்குட்பட்ட தெருவில் நேற்று பொதுமக்கள் நடமாடிக்கொண்டிருந்த போது, அங்குச் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று திடீரென ஆக்ரோஷமடைந்து வழியில் சென்றவர்கள் மீது பாய்ந்து கடித்தது. இந்தத் தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நாய விரட்டி அடித்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!