Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேலும் 10 டயாலிசிஸ் இயந்திரங்கள்

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேலும் 10 டயாலிசிஸ் இயந்திரங்கள்

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 10 டயாலிசிஸ் இயந்திரங்கள்: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆட்சியர் ந.மிருணாளினி நடவடிக்கை.

அரியலூர் மாவட்டத்தில் 8 இருக்கும் மேற்பட்ட தனியாக சிமெண்ட் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்பு கற்களை வெட்டி எடுக்கும் சுண்ணாம்பு

சுரங்கங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இயற்கையாகவே சுண்ணாம்பு அதிக அளவில் உள்ளதால், நிலத்தடி நீரில் உப்பு மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது.

இதனை குடிநீராக பயன்படுத்தும் பொதுமக்கள் பலருக்கும் சிறுநீரக பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து சுண்ணாம்பு தண்ணீரை பருகுவதால் சிறுநீரகத்தின் செயல் அரிப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தான சூழலில் அரியலூர் மாவட்டத்தில் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதுமான நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் இல்லை என்ற அவலம் தொடர்ந்து வந்தது.

அண்மையில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அரசு மருத்துவமனைக்கு ஆய்வு சென்று அங்குள்ள மருத்துவர்களோடு கலந்துரையாடினார். அப்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் சிறுநீரக சிகிச்சை பிரிவில் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மொத்தம் 8 ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஒவ்வொரு மாதமும் 90 சிறுநீரக நோயாளிகளே சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என்பதையும் ஆட்சியர் மிருணாளினி அறிந்து கொண்டார்.

இதனையடுத்து பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது CSR நிதி மூலம் 10 டயாலிசிஸ் யூனிட்டுகளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொருத்தி அதனை சிறுநீரக நோயாளிகளின் வசதிக்காக துவங்கி வைத்துள்ளார்.

இதன் மூலம் தற்பொழுது மொத்தம் 18 டயாலிசிஸ் இயந்திரங்கள் சிறுநீரக பாதிப்படைந்த நோயாளிகளுக்கு ரத்தத்தை சுத்தம் செய்ய உதவும் என்ற சூழல் உருவாகியுள்ளது. ஏறக்குறைய ஒவ்வொரு மாதமும் 163 நோயாளிகள் சுமார் 1300 முறை ரத்தத்தை சுத்தம் செய்யும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

இதன் மூலம் இதுவரை அண்டை மாவட்டமான தஞ்சை திருச்சி ஆகியவற்றிற்கு சென்று டயாலிசிஸ் செய்து வந்த அரியலூர் மாவட்ட மக்கள் இனி அரியலூர் மாவட்டத்திலேயே டயாலிசிஸ் செய்து கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆட்சியராக பொறுப்பேற்ற இரண்டே மாதத்திற்குள் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 புதிய டயாலிசிஸ் யூனிட்டுகளை பொருத்த ஏற்பாடு செய்த அரியலூர் ஆட்சி இருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!