ஜெர்மனி நாட்டில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ கடந்துள்ளது. கோடை காலம் நிறைவடைவதற்கு முன்பே பதிவாகியுள்ள இந்த எண்ணிக்கை, கடந்த கால உச்சபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகமாகும். கடந்த ஜூன் மாதத்தில் ஜெர்மனியின் வெப்ப அலை சில பகுதிகளில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வாட்டி வதைத்தது குறிப்பிடத்தக்கது. பல ஐரோப்பிய நாடுகளிலும் வெப்ப அலை நீடிப்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
