குறித்த காலத்தில் காவிரி நீர் பெற அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கழகத் தலைவர் முகஸ்டாலின் அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தும், அதனை மதிக்காமல் ஆணவத்தின் உச்சத்திற்கே சென்று விட்டீர்களே #CMsir என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
இதுடொடர்பாக அப்பாவு தனது எக்ஸ் தளத்தில், “தலைவர் கலைஞர் அவர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் 28 ஆண்டுகள் போராடி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை பெற்றுத் தந்தனர். குறித்த காலத்தில் காவிரி நீர் பெற அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கழகத் தலைவர் முகஸ்டாலின் அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தும், அதனை மதிக்காமல் ஆணவத்தின் உச்சத்திற்கே சென்று விட்டீர்களே #CMsir. இரண்டு மாதத்திற்கு முன்னரே உச்சநீதிமன்றம் சென்று காவிரி நீர் பெறுவதற்கு பதிலாக, தான்தோன்றித்தனமாக நானே கர்நாடக முதல்வரை சந்தித்து தண்ணீர் கொண்டு வருவேன் என்ற அகந்தையால், நீங்கள் அவமானப்பட்டதோடு தமிழகத்தையும் அவமானப் படுத்தி விட்டீர்களே CM sir ?
#காவிரி படுகையில் உங்கள் நண்பர் ஜனார்த்தன ரெட்டிக்கு மணல் எடுப்பதற்க்காக காவிரி படுகையையே காய வைத்து விட்டீர்களா CM sir ? நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் காவிரி நீர் மற்றும் மேகதாது சார்ந்த ஆக்கப்பூர்வமான எந்த விவாதமும் செய்யாமல், ஆட்சியை தக்க வைக்க #MLA-க்களை விலைக்கு வாங்குவதிலேயே காலத்தை கடத்தி விட்டீர்களே CM sir ?#தமிழக , #கர்நாடக முதல்வர்களின் காலம் தாழ்ந்த சந்திப்பு நடந்திருந்தாலும், காவிரி நீர் பெறுவதற்கான சந்திப்பாக அல்லாமல், தனது நண்பரும், டெல்லி தமிழக அரசு பிரதிநிதியும் , ஜனநாயக பட தயாரிப்பாளரும், கர்நாடக முதல்வரின் நெருங்கிய நண்பருமான பெங்களூர் வெங்கட் நாராயணா-வின் தொழில் சார்ந்த சந்திப்பாகதான் இருந்திருக்கும் என்று சந்தி சிரிக்கிறது CM sir ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
