Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது

ஜாமீனில் வந்த ரவுடி-மறுநாளே மனைவியை கொன்ற கொடூரம்

திருச்சி மாவட்டம் லால்குடி வில்லியனூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் தெய்வநாதன் இவரது மகள் சிம்லா (வயது 51) இவருக்கு திருமணம் ஆகவில்லை இந்நிலையில் இவர் திருச்சியை சேர்ந்த லியோ என்பருடன் பழக்கத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் இருவரும் திருச்சி மிளகுபாறை பகுதியில் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்ததாக தெரிகிறது. லியோவிற்குதிருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். இந்நிலையில் கடந்த 30 ந் தேதி லியோ சிம்லாவின் தங்கை ஜூலிக்கு செல்போனில் பேசி உங்களுடைய சகோதரி இறந்து விட்டார் என்று கூறி உள்ளார்.இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தங்கை ஜூலி சுதா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்காவின் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும்சிம்லாவின் உடலில் காயம் இருந்ததாக தெரிகிறது இதனால் அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகஜூலி சுதா
உணந்தார். பிறகு தகவல் அறிந்து கண்டோன்மென்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிம்லாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தன்னுடைய சகோதரி சார்பில் மர்மம் இருப்பதாக ஜூலி சுதா கண்ட்டோன்
மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிம்லா உடன் இருந்த லியோவை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில் சிம்லாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்தாக்கப்பட்டு இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசாரின் விசாரணையில் லியோ முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். பிறகு போலீசார் தொடர்ந்துவிசாரணை நடத்தியதில் சம்பவத்தன்று சிம்லா உடன் கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு அவரை கீழே தள்ளி உள்ளார் இதில் காயமடைந்தார் சிம்லா உடனடியாக இறந்து விட்டார் என தெரியவந்தது இதையடுத்து போலீசார் மர்ம சாவு என்று வழக்கு பதிவு செய்ததை கொலை வழக்காக மாற்றி கள்ளக்காதலன் லியோவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!