தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பைராமுல்குடா ஏரியில், லோகசானி ராஜேஸ்வரி (34) என்ற பெண் மதுபோதையில் தனது 9 மாத பெண் குழந்தையான அனுராதாவை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ளார். மாலை 6:30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தையடுத்து, அப்பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
