Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளாவில் சிறுமி பலாத்காரம்… 2 பேருக்கு 58 வருடம் சிறை

கேரளாவில் சிறுமி பலாத்காரம்... 2 பேருக்கு 58 வருடம் சிறை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஒல்லுகரை பகுதியை சேர்ந்தவர் சமல் (32). இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்தவர் சூரியதேவ் (27). நண்பர்களான 2 பேரும் கடந்த 2019, டிசம்பர் 16ம் தேதி கோட்டயம் அருகே உள்ள மூவாற்றுபுழாவை சேர்ந்த 6 வயது சிறுமியை வாகனத்தில் கடத்தி சென்று பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து மூவாற்றுபுழா போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு மூவாற்றுபுழா போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சமீர் விசாரித்து, சமல், சூரியதேவ் ஆகியோருக்கு 58 வருடம் கடுங்காவல் சிறையும், தலா ரூ. 3.75 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகையில் ரூ.4 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!