Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை கிடு கிடு உயர்வு… அதிர்ச்சி

தங்கம் விலை கிடு கிடு உயர்வு... அதிர்ச்சி

உலகிலேயே அதிக தங்கம் நுகர்வோர் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. இருப்பினும், நமது நாட்டில் பயன்படுத்துகிற தங்கத்தில் பெரும்பான்மை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கணிசமாக உயர்த்தியதால், தங்கம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது நமது நாட்டில் நகைக்கடைகள் இழப்பை சந்தித்து வருகின்றன. உலகளவில் தங்கத்தின் விலை குறைந்த போதிலும் நகை வாடிக்கையாளர்களும், முதலீட்டாளர்களும் தங்கத்தை வாங்குவது குறித்தும், அதன் மீது முதலீடு செய்வது குறித்தும் குழப்பத்தில் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று (ஆகஸ்ட் 4) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 சரிந்து ஒரு சவரன் ரூ.1,05,600-க்கு விற்பனையானது.

இன்று (ஆகஸட் 5) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,280 உயர்ந்து, ரூ.1,06,880-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.160 உயர்ந்து ரூ.13,360-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது.

error: Content is protected !!