Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனைவி இறந்த துக்கம்… முதியவர் விஷம் குடித்து பலி-திருச்சியில் பரிதாபம்

திருச்சியில் மனைவி இறந்த துக்கம்-முதியவர் விஷம் குடித்து பலி

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி துறையூர் சிக்கம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 71).
இவரது மனைவி கண்ணம்மாள். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார்.
மனைவி மீது அளவற்ற பாசம் வைத்திருந்த பாபுராஜால் மனைவி பிரிவை தாங்கிக் கொள்ள இயலவில்லை. பின்னர் கவலையில் அவரது உடல் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர் டிசார்ஜ் செய்யப்பட்ட அவர் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் வீட்டில் அவர் திடீரெனமயங்கி விழுந்தார்.மீண்டும் உறவினர்கள் அவரை மீட்டு அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பாபுராஜ் விஷம் குடித்து இருப்பதாக தெரிவித்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக இருங்கலூரில் உள்ள
ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் பாபுராஜ் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்த அவரது மகன் சரவணக்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மனைவி இறந்த துக்கம் தாங்காமல்
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளி விஷம் குடித்து சாவு
திருச்சி கல்லக்குடி அருகே உள்ள ஆலம்பாடி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 52). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் வயிற்று வலியிலிருந்து அவரால் மீள இயலவில்லை இதனால் மனம் உடைந்த ராமச்சந்திரன் யாரும் எதிர்பாராத வகையில் விஷம் குடித்தார் பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவரது மனைவி மேனகா கொடுத்த புகாரின் அடிப்படையில் கள்ளக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!