முத்தமிழறிஞர், முன்னாள் முதலமைச்சர், கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள்: கரூர் மாவட்ட திமுக சார்பில் மரியாதை செலுத்தினர்.
முத்தமிழறிஞர், முன்னாள் முதலமைச்சர், டாக்டர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலைஞர்

அவர்களின் திருவுருவச் சிலை மற்றும் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட மொத்தம் 44 இடங்களில், கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகளும், பங்கேற்று கலைஞர் அவர்களின் நினைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
