சென்னையில் தெரு நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி முகாம் இன்று (ஆக.11) முதல் தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அடுத்த 75 வேலை நாட்களில் மொத்தம் 2 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாளொன்றுக்கு 3,000 நாய்கள் வீதம் தடுப்பூசி செலுத்த 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாமில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
