தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, தா. பேட்டை வடக்கு ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர்
பசுபதி ( 53 )கூலித் தொழிலாளி. மதுவுக்கு அடிமையான இவர் அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்களிடம் பணம் கடனாக வாங்கியுள்ளார்.பின்னர் அவரால் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த இயலவில்லை. இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த பசுபதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென ஃபேன் கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
கோவிலுக்கு சென்ற அவரது மனைவி காராயி வீடு திரும்பிய போது கணவர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இது பற்றி தாப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனரதுறையூரில்
மூதாட்டி தவறி விழுந்த சாவு
திருச்சி துறையூர் மலையப்பன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி இவரது மனைவி ஜார்னா பீவி( 62). இவர் அங்குள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் பாத்ரூம் செல்லும்போது கால் தவறி கீழே விழுந்தார்.இதில் அவரது இடுப்பு மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜார்னா பீவி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் பாபுலால் கொடுத்த புகாரின் அடிப்படையில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
