Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கல்லூரி மாணவர் கொலை…உரிய விசாரணை ஆணையம் வேண்டும்

கல்லூரி மாணவர் கொலை...உரிய விசாரணை ஆணையம் வேண்டும்

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் விசிக தலைவர் திருமாவளவனின் சிற்றண்ணை செல்லம்மாள் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்த பின், திருமாவளவன் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்…

கர்நாடகத்தில் அண்மையில் மாடு மேய்க்கச் சென்ற மூன்று பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகி இருக்கிறார்கள். இது மிகுந்த கவலை அளிக்கக் கூடிய ஒன்று. இதனை கண்டித்து முதலமைச்சர்

அறிக்கை வெளியிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.

தொடர்ந்து வனத்துறையினர் தமிழர்களுக்கு எதிரான துப்பாக்கி சூடுகளை நடத்துவது அவ்வப்போது நடந்தேறி வருகிறது. ஆகவே இதை தடுப்பதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

அமுதன் என்ற கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். கல்வி நிறுவனங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பழக்கம் இருக்கிறது என்பதை, இந்த சாவு உறுதிப்படுத்துகிறது. எனவே இது குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

திருவெற்றியூரிலும் ஒரு மாணவர் கொல்லப்பட்டுள்ளார். கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கிடையே மோதல் படுகொலை என்பது நடப்பது அதிர்ச்சி அளிக்க கூடியதாக

இருக்கிறது. புதிய இளைய தலைமுறை பேராதரவுடன் ஆட்சிக்கு வந்த, இந்த அரசு இளைய தலைமுறையினரின் வாழ்வை பாதுகாக்க வேண்டிய விஷயத்தில் கூடுதலாக கவனம் செலுத்தி ஒரே நடவடிக்கை வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அமுதன் மரணம் போதை பொருள் விவகாரத்தில் அல்ல. குழு மோதல் என சட்டமன்றத்தில் அமைச்சர்கள் தெரிவித்த கருத்து பதில் அளித்த திருமாவளவன்…

அமுதனின் பெற்றோரோடு நான் தொலைபேசியில் பேசினேன். அவர்கள் சொன்ன கருத்து அடிப்படையில், நான் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். அமுதன் எந்த வம்புக்கும் செல்லாத இளைஞன். அவர் கஞ்சா போன்ற போதைப் பொருள்களை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்

என்பதால் தான், அவர் கொல்லப்பட்டதாக அவரது பெற்றோர் உறுதியாக சொல்கின்றனர். எனவே அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அது உண்மையா? இல்லையா ?என்பதை கண்டறிய வேண்டும். இதற்கு தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களே அமைச்சராக இருக்கிறார்கள் என்ற செய்தியாளரின் கேள்விக்கு…

தமிழ் தேசியம் என்பது வேறு
தனி நபர்கள் மொழியில் வல்லமை பெறுவது அல்லது பெறாமல் இருப்பது என்பது வேறு. அதற்காக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை அல்லது அமைச்சர்களை அந்த பொறுப்பில் இருந்து தள்ளி வைக்க முடியாது. அவர்கள் கால போக்கில் சிறப்பாக பேசுகிற வல்லமையை பெறுவார்கள் என நம்புகிறேன் வாழ்த்துகிறேன்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் முதலமைச்சரை தவிர மற்ற அமைச்சர்கள் பதிலளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ள கருத்துக்கு பதில் அளித்த திருமாவளவன்…

எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கின்ற பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் உரிய நேரத்தில் உரிய விளக்கம் கொடுப்பார் என நம்புகிறேன் என்று கூறினார்.

தவெக அரசின் 100 நாள் ஆட்சி குறித்து, செய்தியாளர்கள் கேள்விக்கு…

தவெக அரசு அமைந்து 100 நாட்களை வெற்றிகரமாக எட்டியுள்ளது. இப்போது பட்ஜெட் கூட்டத்தொடரும் வெற்றிகரமாக நடந்து கொண்டுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் தமிழ்நாட்டில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முன்னுரிமை எனும் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு, இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தவெக நூறு நாள் ஆட்சி அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிற ஒரு ஆட்சி நிர்வாகமாக இருக்கிறது. குறிப்பாக எந்த துறையிலும் ஊழல் இல்லை எனச் சொல்லும் அளவிற்கு, பொதுமக்கள் பாராட்டக்கூடிய அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறது. இது இந்த ஆட்சியின் சிறப்புகளில் ஒன்றாகும்

தற்போதைய அமைச்சர்கள் கமிஷன் வாங்க தொடங்கியுள்ளனர் எனும் அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த திருமாவளவன்…

அது குறித்து ஆதாரம் இருந்தால் அதை முதலமைச்சர் இடம், அண்ணாமலை நேரில் சந்தித்து தெரிவுபடுத்த வேண்டியது அவசியமானது.

ஆதாரம் இருக்குமேயானால் முதல்வர் அதில் கவனம் செலுத்த வேண்டும். தவெக அரசுக்கு எந்த வகையிலும் ஊரு நேராதபடி ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

error: Content is protected !!