சென்னை: சுகாதாரத்துறை சார்பில் 115 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ளார். புதிய பொது சுகாதார திட்டம் உருவாக்கப்படுவதுடன், நலம் என்ற பெயரில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும், மருத்துவத் துறையை மேம்படுத்தும் வகையில் 284 உயர் சிறப்பு மருத்துவ பணியிடங்களும், 2,500 செவிலியர் பணியிடங்களும் புதிதாக உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
