Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போலீசாரிடமிருந்து தப்பிய ரவுடி உயிரிழப்பு… திருச்சியில் பரபரப்பு

போலீசாரிடமிருந்து தப்பிய ரவுடி உயிரிழப்பு-திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் போலீசாரிடமிருந்து தப்பி ஓடிய ரவுடி உயிரிழந்தார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ரவுடியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சியில் நடந்த இச்ச சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கே.கே.நகர் உடையான்பட்டி ரயில்வே கேட் பகுதியில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து எடுத்து வரப்பட்டது தெரிய வந்துள்ளது. ஆட்டோவை ஓட்டி வந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர், திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லாங்குளம் பாரதியார் நகரை சேர்ந்தவர் அப்புச்சி (எ) அபுதாகிர் (38) என்பது தெரிய வந்தது. அவர் போலீசாரை ஏமாற்றிவிட்டு அந்த இடத்திலிருந்து அபுதாகிர் தப்பி ஓடிவிட்டார். ஆட்டோவை கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடிய அபுதாகிரை தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் அரசு காலனியை சேந்த பிரபு (34) என்பவரை, அபுதாகிர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். கஞ்சா கடத்தல், அரிவாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் அபுதாஹிரை போலீசார் தேடி வந்தனர். அபுதாஹீர் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நேற்று காலை திருச்சி – மதுரை ரயில் வழித்தடத்தில் ரவுடி அபுதாகிர் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அபதாகிர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக தலைமறைவாக இருந்த ரவுடி அபுதாகிர் போதையில் தண்டவாளத்தில் படுத்திருந்த போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

திருச்சியில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓதிய பிரபல ரவுடி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!