பெல்ஜியத்தின் கிழக்கு ஃபிளாண்டர்ஸ் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குழாய் பதிக்கும் பணியின் போது, சுவருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.98 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் மற்றும் நாணயங்களை தொழிலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த புதையலை கைப்பற்றி இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்நாட்டு சட்டப்படி, எந்தவொரு குற்ற பின்னணியும் இல்லாத பட்சத்தில், இந்த நிதி கண்டுபிடித்த தொழிலாளர்களுக்கும் இடத்தின் உரிமையாளருக்கும் சமமாக பகிர்ந்து வழங்கப்படும்.
