தமிழ்நாடு அரசு போக்குவரத்துறையில் பணியிடங்களை நிரப்ப உத்தரப்பிரதேச நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், சிஐடியு தொழிற்சங்கம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் என்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் கைவிடப்பட்டு சமூக நீதியும் பாதிக்கப்படும் என்றும் கூறி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
