2023 முதல் 2025 வரை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் விடுத்த வழக்கில், சென்னையில் கைதான ஐடி பொறியாளர் சரத்தை காவலில் எடுத்து விசாரிக்க கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு கேரள காவல்துறை அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். கேரளாவில் மட்டும் சரத் மீது 70 வெடிகுண்டு மிரட்டல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், நீதிமன்ற அனுமதி பெற்று அவரை தங்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
