திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே, விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின்போது காவலர்கள் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சம்பவம் தொடர்பாக 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விஷம் அருந்திய இளைஞருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
