Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டம் வென்ற கேரள பெண்

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டம் வென்ற கேரள பெண்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 அழகி போட்டி நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து 52 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் கேரளாவைச் சேர்ந்த சட்ட மாணவி கஸியா லிஸ் மெஜோ மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றார்.

அதேபோல், தமிழகத்தை சேர்ந்த வைஷ்ணவி கணேஷ் முதல் ரன்னர்-அப்பாகவும், குஜராத்தைச் சேர்ந்த அனுஸ்ரீ சதாவ்லேகர் இரண்டாம் ரன்னர்-அப்பாகவும் மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா 2026 பட்டத்தை வென்றனர். போர்ட்டா ரிக்கோவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள 75வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா அழகியாக கஸியா லிஸ் பங்கேற்பார்.

கேரளா மாநிலம் மாவேலிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கஸியா லிஸ் மெஜோ. இவருக்கு வயது 19. இவர் சட்டப்படிப்பு பயின்று வருகிறார். இதற்கு முன்னர் நடைபெற்ற மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025 போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

2007ல் பிறந்த இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வளர்ந்து, எமிரேட்ஸ் நேஷனல் பள்ளி, செயின்ட் ஜோசப் பள்ளி மற்றும் அபுதாபி இந்தியன் பள்ளி ஆகியவற்றில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.

இன்று, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்று கஸியா லிஸ் மெஜோ வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

error: Content is protected !!