Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லி கார் விபத்தில் 2 எம்எல்ஏக்கள் உள்பட 6 பேர் காயம்!

டில்லி கார் விபத்தில் 2 எம்எல்ஏக்கள் உள்பட 6 பேர் காயம்!

டில்லியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஐ.டி.ஓ (ITO) சந்திப்பு மற்றும் பொதுப்பணித்துறை (PWD) அலுவலக வளாகப் பகுதி எப்போதும் அதிகளவில் வாகன நெரிசல் மிகுந்த பகுதியாகும். லக்ஷ்மி நகர் மற்றும் பழைய காவல்துறை தலைமையகப் பகுதியை இணைக்கும் இந்த முதன்மைச் சாலையில் நள்ளிரவு நேரங்களில் வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக வீதித் தடுப்புச் சுவரைத் தாண்டி கார் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார் மற்றும் விபத்து நடந்த விதம் டில்லி ஐ.டி.ஓ பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே நேற்றிரவு சுமார் 9:30 மணியளவில் லக்ஷ்மி நகரிலிருந்து ஐ.டி.ஓ நோக்கிச் சென்ற ‘ஸ்விப்ட்’ (Swift) கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகமாகச் சென்ற அந்த கார், சாலையின் நடுவே இருந்த மையத் தடுப்புச் சுவரை மோதி உடைத்துக் கொண்டு, எதிரே இருந்த இஃபேஸ் பாதைக்குச் சென்றது.

அப்போது ஐ.டி.ஓ-வில் இருந்து லக்ஷ்மி நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘இன்னோவா’ (Innova) கார் மீது அந்த கார் நேருக்கு நேர் பலமாக மோதியது. இந்த இன்னோவா காரில் டெல்லி கிராரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனில் ஜா மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அபய் பாட்டீல் ஆகியோர் பயணித்தனர். விபத்தை ஏற்படுத்திய மற்றொரு காரை அசுதோஷ் பாண்டே என்பவர் ஓட்டி வந்ததாகவும், அவருடன் அவரது மனைவி மற்றும் 2 சிறு குழந்தைகள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் இரண்டு கார்களிலும் பயணித்த 2 எம்.எல்.ஏக்கள் உட்பட 6 பேரும் லேசான காயமடைந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஐ.பி. எஸ்டேட் (I.P. Estate) காவல் நிலையப் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக எல்.என்.ஜே.பி (LNJP) அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்பொழுது அனைவரும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி சீரான உடல்நிலையுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!