Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.17 கோடி உண்டியல் காணிக்கை!

திருப்பதி கோயிலில் நேற்று முன்தினம் (ஆக.23) 81,553 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களில் 34,483 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று கோவில் உண்டியல் மூலம் ரூ.4 கோடியே 17 லட்சம் காணிக்கை கிடைத்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரே நாளில் 3 லட்சத்து 95 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 6 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர். இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் 8 முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!