திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தான். கூவல்குட்டை பகுதியில் வீட்டில் திறந்துகிடந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து விஜயகுமார் என்பவரது குழந்தை நிதீஷ் உயிரிழந்தான். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
