டிரம்ப் நிர்வாகம் உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களில் விசா நேர்காணல்களை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.
தூதரக அதிகாரிகளுக்கான புதிய உலகளாவிய பயிற்சி திட்டத்திற்காக நேர்காணல்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பொது நலத்திட்ட உதவிகளை சார்ந்து வாழ வாய்ப்புள்ள விசா விண்ணப்பதாரர்களை துல்லியமாக கண்டறிவதே பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
விசா நடைமுறைகளை கடுமையாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஐ.டி. ஊழியர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
