கர்நாடக மாநிலம் விஜயபுரா அருகே உள்ள ஏரியில் மூழ்கி 4 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஏரியில் இருந்து அழுகிய நிலையில் இருந்த அவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் ஏரியில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி இறந்தனரா அல்லது தற்கொலை செய்துகொண்டனரா என்ற கோணத்தில் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் பரிதாபம்- ஏரியில் மூழ்கி 6 பேர் பலி
