நேபாளம் மற்றும் சீனா (திபெத்) எல்லை பகுதியில் உள்ள ரசுவா மாவட்டத்தில், போதே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் நேற்று (ஆக.27) ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி சுமார் 1,400 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளப் பகுதியில் 500 வெளிநாட்டினர் உட்பட 826 பேரும், சீன எல்லையான ஜி ரோங் துறைமுகப் பகுதியில் 260 வெளிநாட்டினர் உட்பட 558 பேரும் காணாமல் போயுள்ளதாக இரு நாட்டு அரசுகளும் தெரிவித்துள்ளன. மேலும், மாயமானவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
