கரூரில் போக்குவரத்து துறையை தனியார்மயமாக்கும் நடைமுறையை கண்டித்து தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய வாயிற்கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் திருமாநிலையூர் பகுதியில் உள்ள TNSTC மண்டல அலுவலக வளாகத்தில் AITUC சார்பில் போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மயம் மற்றும் ஒப்பந்த முறைகளை கைவிட வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள பணிகளை ரத்து செய்ய வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு மூலம் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்தப்படி நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் தொழிலாளர்கள் முன்வைத்தனர்.
தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்து வழித்தடங்களை குறைக்கக்கூடாது என்றும், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழக அரசு மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் மற்றும் AITUC நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
