Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையிலிருந்து நேபாளம் சென்ற சித்ராவின் மகன் பேட்டி

நேபாள சம்பவத்தில் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூரிலிருந்து நேபாளத்திற்கு சென்ற சித்ராவின் மகன் பேட்டி

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணத்தில் உள்ள தனியார் யாத்ரா நிறுவனம் மூலம் புனித ஆன்மீகப் பயணமாக தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 57 பேர் புனித பயணம் மேற்கொண்டனர், இந்நிலையில் நேபாள நாட்டில் பெருமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற 57 பேரில் 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பாதுகாப்பு மையத்தில் உள்ளனர், மீதமுள்ள 30 பேர் நிலைமை இதுவரை தெரியவில்லை, இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இந்நிலையில் தஞ்சாவூரில் இருந்து புனித ஆன்மீகப் பயணம் சென்ற சித்ரா என்பவரின் மகன் ராஜா என்பவர் கூறுகையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, தனது அம்மா ஆன்மீகப் பயணம் சென்றார், இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் தனது செல்போனுக்கு போட்டோ அனுப்பி உள்ளார், இதுதான் கடைசி தகவல் ஆகும், இந்த வெள்ள சம்பவத்திற்கு பிறகு அதன் பின்னர் தொடர்பு கொள்ள முடியவில்லை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் ரேவதி, தாசில்தார் ஆகியோர் வாட்ச் ஆப் குழு அமைத்து தகவல்களை தெரிவிக்கின்றனர், அதில் அரசின் உறுதிப் பூர்வ தகவல் இல்லை, 20 பேர் மீட்கப்பட்டவர்களில் தனது அம்மா பெயர் இல்லை, தங்களுக்கு பயமாக உள்ளது, இரண்டாவது நாளாக இருப்பதால் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து மீட்பு பணிகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்

error: Content is protected !!