வரவிருக்கும் பவுர்ணமி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 3,710 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் குணசேகரன் தெரிவித்துள்ளார். அதன்படி சென்னையின் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்தும், பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் முக்கிய இடங்களுக்கு இச்சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
