சட்டப்பேரவையில் கடந்த 10 நாட்களாக மானியக் கோரிக்கைகள் குறித்து பேசுவதை தவிர்த்து, ஒருவரை ஒருவர் குறை கூறி கொண்டு சண்டை மட்டுமே போடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாடியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று (ஆக.27) பேசிய அவர், மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்காகவே சட்டமன்றம் உள்ள நிலையில், இரவும் பகலுமாக தேர்வுக்கு தயார் ஆவது போல் வந்து அமர்ந்தும் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
