Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நேபாளத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்படக்கூடும்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை

நேபாளத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்படக்கூடும்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை

நேபாள-சீன எல்லைக்கு அருகே, நீரோட்டத்தின் மேல்பகுதியில் ஒரு அடைப்பு இன்னும் நீடிக்கிறது என்றும், அது இரண்டாவது முறையாக மீண்டும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த திடீர் வெள்ளப்பெருக்கு அந்நாட்டை உருகுலைய செய்துள்ளது. இந்நிலையில் நேபாள-சீன எல்லைக்கு அருகே நீரோட்டத்தின் மேல்பகுதியில் ஒரு அடைப்பு இன்னும் நீடிக்கிறது என்றும், அது இரண்டாவது வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த எச்சரிக்கையை, இந்து குஷ் இமயமலைப் பிராந்தியத்தின் எட்டு நாடுகளான இந்தியா, நேபாளம், பூட்டான், சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றுக்குச் சேவை செய்யும், காத்மாண்டுவைத் தலைமையிடமாகக் கொண்ட அரசுகளுக்கிடையேயான அமைப்பான சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம் (ICIMOD) விடுத்துள்ளது. 1983-ல் நிறுவப்பட்ட ஐசிஐஎம்ஓடி (ICIMOD), இமயமலைப் பகுதி முழுவதும் உள்ள மலைச் சூழல்கள், பனியாறுகள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் அபாயங்கள் குறித்து ஆய்வு செய்யும் முன்னணி அறிவியல் நிறுவனங்களில் ஒன்றாகும்.

கல்ச்சியில் உள்ள திரிசூலி ஆற்றில், வெறும் 30 நிமிடங்களுக்குள் நீர்மட்டம் ஒன்பது மீட்டர் வரை உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. மாலேகுவில் ஆற்று நீர்மட்டம் ஏழு மீட்டர் உயர்ந்தது. மலைகளின் உயரமான பகுதிகளில் பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டதே இதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!