மகாராஷ்டிராவில் மருந்து ஆய்வாளர் பணிக்கான தேர்வில் தனது முன்னாள் காதலி தேர்ச்சி பெற்ற ஆத்திரத்தில், ராஜேந்திர படேல் என்ற இளைஞர் வினாத்தாள் கசிந்த உண்மையை தேர்வாணையத்திற்கு இ-மெயில் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். தேர்வுக்கு முன்பே பணம் கொடுத்து வினாத்தாள் பெற்று அப்பெண் தேர்ச்சியடைந்தது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து வினாத்தாள் கசிவுக்கு காரணமான அரசு அதிகாரிகள் மற்றும் அப்பெண்ணின் தந்தை உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
