Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே காற்றாலை மின்கம்பங்கள் அமைப்பதாக குற்றச்சாட்டு-நூதன போராட்டம்

கடவூர் ஒன்றியத்தில் அனுமதியின்றி காற்றாலை மின்கம்பங்கள் அமைப்பதாக குற்றச்சாட்டு – விவசாயிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமைத்து நூதன முறையில் போராட்டம்

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் தரகம்பட்டி, கீழப்பகுதி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில், காற்றாலை நிறுவனங்கள் மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளை அமைத்து வருகின்றனர் அரசின் உரிய அனுமதியின்றி விவசாய நிலங்களை உள்ள மரங்களை அகற்றி அனுமதியின்றி அமைக்கப்பட்டு வருவதாக கூறி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அடுப்பு வைத்து சமைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியிருப்புகள், வீடுகள், பள்ளிகள் மற்றும் சாலைகளுக்கு அருகில் மின்கம்பங்கள் அமைக்கப்படுவதாகவும், இதற்காக மரங்கள் வெட்டப்படுவதுடன், சாலைகள் மற்றும் நீர்நிலைகள் சேதப்படுத்தப்படுவதாகவும்,

மேலும், மின்கம்பங்கள் அமைக்கும் பணியைத் தடுக்க முயன்றபோது, காற்றாலை நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் தங்களிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி தங்களை அச்சுறுத்தியதாகவும்,

இதுகுறித்து கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் “கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில்” ஈடுபட்டனர்.

அனுமதியின்றி மின்பாதை அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், விதிமீறல்கள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயந்திரங்களைப் பறிமுதல் செய்து, தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால், கடவூர் ஒன்றிய அலுவலகத்தைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!