Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு… திருச்சியில் பரபரப்பு சம்பவம்

திருச்சி அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் சஞ்சய் (26). இவர் ரேசன் அரிசிகளை வாங்கி வெளியில் விற்பது வழக்கம். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் ரேசன் அரிசியை வாங்கி கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 20 நாட்களாக சதாம் உசேன் சஞ்சய்க்கு
ரேசன் அரிசியை வாங்கி தரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சஞ்சய், சதாம் உசேன் அழைத்து அவரை மிரட்டும் பாணியில் பேசி உள்ளார். இந்த விஷயத்தை சதாம் உசேன் தனது சகோதரர் இப்ராஹிம் (வயது 22) என்பவரிடம் கூறினார். இதையடுத்து இப்ராஹிம் தனது ஆதரவாளர்கள் சிக்கந்தர் பாஷா, கிஷோர், பாட்டில் மணி ஆகியோருடன் சேர்ந்து சஞ்சயை சந்தித்து பேசி அவரிடம் தகராறில் ஈடுபட்டு சஞ்சய் மற்றும் அவரது தாய் ராமுதை ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த சஞ்சய், ராமுதை ஆகிப இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சஞ்சய் கொடுத்த புகரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கிஷோரை கைது செய்துள்ளனர் மேலும் ரவுடி இப்ராஹீம் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!