சேலம் மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீரை இன்று (செப்.1) திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், அங்கிருக்கும் நீர்மின் நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 250 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த நிலையத்தில் மின் உற்பத்திக்கான வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இந்நிலையில், இந்த ஆய்விற்கு பின் விமானநிலையம் செல்லும் அவர் சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
