Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரே நேரத்தில் 7 வீரர்கள் நீக்கம் – பாகிஸ்தானில் பரபரப்பு!

ஒரே நேரத்தில் 7 வீரர்கள் நீக்கம் – பாகிஸ்தானில் பரபரப்பு!

 பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட்டில் ஆடி வருகிறது. இதில் முதல் 2 போட்டியிலும் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதையடுத்து சல்மான் ஆகா, முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக், அலி உஸ்மான், ஆமிர் ஜமால், உவைஸ் ஜாபர் மற்றும் குர்ரம் ஷாசாத் அகிய 7 வீரர்கள் இங்கிலாந்தில் இருந்து உடனடியாக தாயகம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து தலைமைப் பயிற்சியாளர் சர்பராஸ் அகமது மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் உமர் குல் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

நீக்கப்பட்ட வீரர்களுக்கு மாற்றாக சயீம் அயூப், அப்துல்லா ஃபசல் ஆகியோருடன் அறிமுக வீரர்களாக அராஃபத் மின்ஹாஸ், முகமது இம்ரான் ஜூனியர், சாத் பைக், முகமது இம்ரான் ரந்தாவா மற்றும் ரசாவுல்லா சேர்க்கப்பட்டுள்ளனர். விசா அனுமதி கிடைத்தவுடன் இவர்கள் இங்கிலாந்துக்கு பயணிக்க உள்ளனர். இதனிடையே பாக். வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியின் இந்த அதிரடி முடிவுக்கு முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி எஞ்சி உள்ள நிலையில், ஆகா மற்றும் ரிஸ்வான் ஆகிய இருவரையும் அணியில் தக்கவைத்திருக்கலாம். அவர்களை ஆடும் லெவனில் சேர்க்காமல் விட்டிருக்கலாம், ஆனால் அணியில் அவர்களை வைத்திருக்க வேண்டும். அவர்கள் மூத்த வீரர்கள், கேப்டன்களாகவும் செயல்பட்டவர்கள். அவர்களைத் திருப்பி அனுப்புவது அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது ஒரு நல்ல முடிவல்ல என சாடி உள்ளார்.

error: Content is protected !!