Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் நெல் கொள்முதல் தாமதம் – விவசாயிகள் வலியுறுத்தல்!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை அருகே விசித்திரராஜபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது..

இந்த கொள்முதல் நிலையம் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி இழுத்து மூடப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு இதுவரை திறக்கப்படாததால்..

10-ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாகவும், தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை திறந்து பார்த்தால் தான் நெல் கெட்டுப் போகாமல் இருக்கிறதா என்பது தெரியவரும் எனவும்..

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித பயனும் அளிக்கவில்லை என தெரிவிக்கும் விவசாயிகள்..

இழுத்து மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி திருவையாறு கும்பகோணம் நெடுஞ்சாலையில் அமர்ந்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பயணிகள் பாதிப்பு அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது..

error: Content is protected !!