மதுரை அருகே சோழவந்தானில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை சோழவந்தானில் குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீச்சு சம்பவங்கள் தொடர்வதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய நபரின் தலையில் தீப்பிடித்ததால் அங்கிருந்து தப்பிய காட்சிகள் பதிவாகியுள்ளது.
