மதுரை மாவட்டம் சோழவந்தானில் 2 இடங்களில் நாட்டு பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நாகார்ஜூன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெட்ரோல் குண்டுகளை வீசியதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
