Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் 6,000 போதை மாத்திரைகள் பறிமுதல் – 4 பேர் சிக்கினர்!

தஞ்சையில் 6,000 போதை மாத்திரைகள் பறிமுதல் – 4 பேர் சிக்கினர்

ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி, தஞ்சையில் விற்பனை செய்த நான்கு இளைஞர்களைக் கைது செய்த போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், அவர்களிடம் இருந்து 6 ஆயிரம் போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்து உள்ளனர்.

தஞ்சையில், போதை மாத்திரை அதிகளவில் விற்பனை நடைபெறுவதாக, போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில், போதை தடுப்புப் பிரிவு போலீசார் கீழவாசல் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, கீழவாசல், வண்ணாரத்துறையைச் சேர்ந்த திராவிடமணி மகனும் பிரபல ரவுடியான

பிரகாஷ் (எ) மாடு பிரகாஷிடம் (26) அதிகளவில் போதை மாத்திரைகள் இருந்துள்ளன.

இதையடுத்து அவரைப் பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது நண்பர்களான கீழவாசல்,சின்னையா பிள்ளை தெருவை சேர்ந்த ஹாஜா மைதீன் மகன் முகமது அப்பாஸ்,25, கீழவாசல் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த சந்திரபோஸ் மகன் சுபாஷ்,24, மற்றும் அன்னப்பன்பேட்டையைச் சேர்ந்த முருகேசன் மகன் சஞ்சய் சம்பத்,23, ஆகியோரிடம், 6,000 டாபென்டாடால் என்கிற போதை மாத்திரைகள் இருந்தது.

இதையடுத்து, போதை பொருள் தடுப்பு பிரிவினர் பிரகாஷ், அப்பாஸ்,சுபாஷ்,சஞ்சய் சம்பத் ஆகிய நான்கு பேரையும் கிழக்குப் போலீசில் ஒப்படைத்தனர்.

நான்கு பேர் மீதும் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6,000 போதை மாத்திரைகள், ஒரு கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 60 ஆயிரம் ரூபாயாகும்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், முகமது அப்பாஸ், நாக்பூரில் உள்ள சாய் டிரேடிங் என்ற கம்பெனி ஒன்றில் இருந்து மாத்திரைகளை, ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து, அந்த மாத்திரைகளைப் பார்சல் மூலம் பெற்று, நண்பர்களுடன் இணைந்து கல்லுாரி, பள்ளி மாணவர்களைக் குறித்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

இது குறித்துப் போதை பொருள் தடுப்பு போலீசார் கூறியதாவது: தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் சதீஷ்குமார்,29, இவரது நண்பரான திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ரஞ்சித்குமார்,24, இருவரும் சேர்ந்து போதை மாத்திரைகளை நாக்பூர் நிறுவனத்தில் வாங்கியுள்ளனர். மேலும், திருவையாறு பகுதியில் ரஞ்சித்குமார் தனது உறவினர் வீட்டில் தங்கிக்கொண்டு, போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்றுள்ளார். இதற்காகச் சதீஷ்குமாரை வரவழைத்து இருந்தார். இந்நிலையில், கடந்த ஆக.30ம் தேதி இருவரிடமும் இருந்து ஆயிரம் மாத்திரைகளைப் பறிமுதல் செய்து, கைது செய்து மரூர் போலீசில் ஒப்படைத்தோம். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், முகமது அப்பாஸ், பிரகாஷ் ஆகியோர் போதை மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது என்றனர்.

error: Content is protected !!