Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை- நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு

மயிலாடுதுறை- நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் . காலி மது பாட்டில்கள் வாங்குவது தொடர்பாக நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை. டாஸ்மாக் கடை வாடகை

மற்றும் மின் கட்டணங்களை அரசு செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்ட டாஸ்மாக் கடை பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்றும் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திற்கு டாஸ்மாக் ஊழியர்கள் வந்தனர்.

ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சங்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் .

இந்த பேச்சுவார்த்தையில் காலி மது பாட்டில்கள் தொடர்பான பிரச்சனை அடுத்த 15

நாட்களுக்குள் முடிவுக்கு வந்து விடும் என்றும் வேலைநிறுத்தம் தொடர்பாக ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள் இன்று கடையை திறப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர் .

error: Content is protected !!