Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு… 8 விமான நிலையங்கள் மூடல்!

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 விமான நிலையங்கள் மூடப்பட்டன. ஜாவா மற்றும் சுமாத்ரா தீவுகளுக்கு நடுவில் அமைந்துள்ள அனாக் கிரகடாவ் எரிமலை, வெள்ளிக்கிழமை இரவு வெடித்ததில் இருந்து, அதிலிருந்து பரவிய சாம்பல் ஜகார்த்தா மற்றும் அதை சுற்றியுள்ள பல பகுதிகளை மூடியுள்ளது. இதனிடையே, மாறிவரும் வானிலை காரணமாக இது எப்போது முடிவுக்கு வரும் என்பதை எங்களால் உறுதியாகக் கூற முடியாது என்று போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

இதையடுத்து 8 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதன் காரணமாக 1,70,000 பயணிகள் தவிப்புக்குள்ளாகினர். எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் காற்றில் பரவியதை தொடர்ந்து விமான சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. ஜாவா மற்றும் சுமத்திராவுக்கு இடையே சுந்தா நீரிணையில் எரிமலை வெடித்ததால் 20,000 அடி உயரம் வரை சாம்பல் பரவியது. இந்தோனேசியாவில் அனக் கிரகாட்டா எரிமலை வெடித்ததால் 15 கி.மீ. தூரம் வரை சாம்பல் பரவியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

error: Content is protected !!